ருத்திராட்சம் தோன்றிய விதம் அதன் மகிமை..?
ருத்திராட்சத்தின் மகிமையை விளக்குகிறது இந்தப் புராணக் கதை:
முன்னொரு காலத்தில் சார்வாங்கன் என்பவன் தன் கடமைகளை மறந்து, தான் செய்த வியாபாரத்தில் பல தவறுகள் புரிந்து, கூடா ஒழுக்கம் கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்து களவுத் தொழிலிலும் ஈடுபட்டான்.
இறுதியாக விந்திய மலைச் சாரலில் உயிர் துறந்தான். அவனை யமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் பற்றி இழுத்து யமலோகத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது, சிவகணங்கள் அவர்களைத் தடுத்தனர்.
‘இவ்வுயிரை கைலாயத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்’ என்றனர். ஆனால், யமனின் தூதுவர்களோ ‘இவன் மகாபாவி’ என்றனர். அதற்கு சிவகணங்கள், ‘இவன் வாழ்ந்த முறை ஒழுங்கீனமானதாக இருக்கலாம்.
ஆனால், இவன் இறந்த இடத்திலிருந்து பத்து முழ தொலைவில் ஒரு ருத்திராட்ச மரம் உள்ளது. அந்த மரத்தின் அதிர்வலைகள் இவனை புண்ணியவனாக்கிவிட்டது. எனவே, இவனுக்கு சிவலோகப் பதவி கிட்டியது’ என்றனர். ருத்திராட்சத்திற்கு அவ்வளவு சிறப்பு உண்டு!
ருத்திராட்சம் தோன்றியது எப்படி?
ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின.
வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன.
ருத்திராட்ச தோற்றம் எப்படி இருக்கும்?
ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.
சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும், நல்ல வர்ணமுள்ளதுமான ருத்திராட்சம், த ண்ணீரில் போட்டால் மூழ்குவதும், இரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியது மான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை.
கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும், கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும், மேல் கையில் பதினாறும், மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம்.
பலன்?
ருத்திராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், அவர்களால் பிறர் அனைவரும் பயன்பெறும் வகையிலும் ந ன்மைகளும் அமையும்.
ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும், அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும், ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும், புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும், சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும்.
ஒரு முக ருத்திராட்சம் முதல் பதினாறு முகம் ருத்திராட்சம் வரை அணிவதன் மூலம் பல பலன்களை அடையலாம்.
இந்த இதழுடன் உங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருக்கும் ஐந்து முக ருத்திராட்சத்தைக் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இவர்களை நெருங்க காலனும் அஞ்சுவான்; மார்பக வியாதிகள் விலகும்.
ஐந்து முக ருத்திராட்சத்திற்கு கீழ்காணும் பல மருத்துவ குணங்கள் உண்டு என்பார்கள்:
ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்திராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி.
இதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை கண் இமைகள் மீது தடவிக்கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்திராட்சத்தைத் தூளாக்கி, துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும்.
தண்ணீரில் இதைப் போட்டு சில மணிநேரம் ஊற வைத்து பிறகு ருத்திராட்சத்தை நீக்கிவிட்டு தண்ணீரை உட் கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணமாகும்.

No comments:
Post a Comment